31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருபாநிதி யோகராஜா
வயது 5317 ஜூன், 1957 – 9 ஜூலை, 2010
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநாரந்தனையை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி யோகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
என் அருமைச் சகோதரியே!
என் அருமைச் சகோதரியே!
என் இனிய அக்காவே - நீ
எங்கு சென்றாய் எமை விட்டு
எண்ண முடியவில்லை - நீ
எம்முடன் இல்லை என்பதை
ஒரு கூட்டுப் பறவைகளாய் - நாம்
ஒன்றாக வாழ்ந்திருந்தோம்.
கொடிய விதியாலே - எம்
குடும்பத்தலைவனை நாம் பிரிந்தோம்
அன்புடனே அம்மா எங்கள்
அனைவரையும் வளர்த்தெடுத்தார்
வீட்டுக்கடமைகள் தனை உணர்ந்து
வெளிநாடு நான் வந்தேன்.
அன்புத்துணைவனுடன் நீயும்
அடுத்து வந்தாய் நான் மகிழ்ந்தேன்
அக்கா மறு அன்னை என்பார் - என்
அன்னையாய் உனை நினைத்தேன்.
ஆனந்தமாய் வாழ்ந்திருந்தோம் நாங்கள்
கண்ணை இமைகாப்பது போல்
கலங்காது எமைக் காத்திருந்தாய்
என்ன துணிவு கொண்டு - இன்று நீ
ஏகினாய் எமை விட்டு மூத்த
தனையனைப் பிரிந்ததினால் - நாளும்
தளர்த்து நீ போனாயே துரும்பாய் நீ ஆனாயே!
தனித்துநிற்கும் உன் தலைவனையும்
தங்கக்குழந்தையும் மறந்தாயே
இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதியம்மா
இளவயதில் நீ பிரிந்ததுதான் - எங்கள்
இதயத்தை வாட்டுதம்மா
இன்னும் பல பிறவிகள் - என்
இனிய அக்காவாய்ப் பிறந்திடம்மா!
இறைவனிடம் நாம் கேட்பது என்றும்
இதைத் தானம்மா.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— என்றும் நீங்காத நினைவுகளுடன் அன்புச் சகோதரன்(தம்பி) கோ.திருக்குமார் குடும்பம்(பிரான்ஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

