ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிருஸ்னி நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்னி நடராஜா

Anglia Ruskin University , Cambridge BSc Optometry

வயது 226 ஜூன், 1997 – 27 அக்டோபர், 2019

பிறந்த இடம்
Edmonton
வாழ்ந்த இடம்
England

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!

உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது

நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்

என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

வாழ்வில் சாதிக்க நினைத்த கிருஸ்னி நடராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் லண்டன் Edmonton-இல் 06/JUN/1997 இல் நடராஜா இன்பறேசா தம்பதிகளின் பாசமிகு புதல்வியாக கிருஸ்னி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். இந்திரன் சரஸ்வதி தம்பதிகள் மற்றும் இராஜரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு பேத்தியாக அவர்கள் மடியில் தவழ்ந்த இவர், செந்தூரன் எனும் தனது பாசமிகு சகோதரனோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார். இவர் பிரித்தானியாவில் உள்ள Anglia Ruskin பல்கலைகழகத்தில் BSc Optometry-ஐ படித்து வந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரான இவர், தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் நிறைந்தவரான இவர், அனைவரோடும் பாசமாக பழகக்கூடியவர். இவ்வாறு பெற்றோர், சகோதரன், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 27.10.2019 இல் 22 வயதில் பிரித்தானியாவில் காலமானார்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 26 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.