31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டினர் நாகராசா
வயது 599 நவம்பர், 1956 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Kaithady Navatkuli
- வாழ்ந்த இடம்
- Kaithady Navatkuli
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்டினர் நாகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் உருவமாய் பாசத்தின் தெய்வமாய், குடும்பத்தின் குலவிளக்காய், வாழ்க்கையின் வழிகாட்டியாய் இருந்து இன்று எங்களை எல்லாம் ஆறாத்துயரில் விட்டுச் சென்று எம் நினைவுகளோடு நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தெய்வமான கிட்டினர் நாகராசா அவர்களின் இறுதி கிரியையின் போதும், தகன கிரியையின் போது நேரில் ஓடிவந்து உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் தொலைபேசி, முகநூல் ஊடாக உள் நாட்டிலும், வெளி நாட்டில் இருந்தும் ஆறுதல் கூறியவர்களுக்கும், பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நடைபெறவிருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
கைதடி- நாவற்குழி,
கைதடி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

