மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோமளம் தில்லையம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம்
வயது 7528 நவம்பர், 1942 – 2 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளம் தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம்(KTC கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவகுமாரி(லண்டன்), Dr. சிவகுமார்(Lecturer- University of Moratuwa), சிவறூபி(லண்டன்), சிவலோஜினி(Department of Inland Revenue, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம், இராமநாதன், பார்வதி, சபாபதி, புஸ்பம், பரமாநந்தம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(BP Filling Station- UK), Dr. கிருபாலினி(Kalubowila Teaching Hospital), சேகரன்(Maruthy Cash & Carry- London), அதிரதன்(Lecturer University of Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷா, பிரமிஷா, சிவானி, சிவானுஜன், பிரனித்தா, பிரணவன், பிரணவி, அஷ்ருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

