ஆறுதல்

நினைவஞ்சலி

கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஷ்ணபிள்ளை அன்னம்மா

வயது 9412 மார்ச், 1925 – 14 டிசம்பர், 2019

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்களின் 7ம் மாத நினைவஞ்சலி.

அம்மா என்றழைக்க அம்மா இன்றில்லை
ஐயாவை சிறுவயதில் இழந்த எமக்கு எல்லாமான ஓர் உன்னத ஆன்மா

அம்மம்மா, அப்பம்மா என்றழைக்க இன்று நீங்கள் இல்லை
பேரப்பிள்ளைகளில் உங்கள் பாசம் எங்களுக்குத்தான் தெரியும்

பூட்டி என்றழைத்தால் புன்னகை தவழும் உங்கள் முகம்
என்றென்றும் நிலைத்திருக்கும் எங்கள் உள்ளத்தில்

உயிருள்ளவரை உங்களை மறக்கோம் என்றென்றும்
எங்களுடன் வாழும் ஓர் உன்னத ஆன்மா நீங்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் வடபாகத்திலுள்ள யாழ்ப்பாணத்தில் தொன்மை வரலாற்றுச் சிறப்புடைய கந்தரோடையில் கந்தையா சின்னப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது புதல்வியாக அமரர் அன்னம்மா அவர்கள் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வைத்த இயற் பெயர் அன்னப்பிள்ளை.

இவர் தனது அக்காவுடனும் தம்பியுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த பொழுது, வருத்தம் காரணமாக தம்பியை மிகச்சிறிய வயதிலேயே இழந்தார்கள்.

முழுக் கதையையும் வாசிக்க

சிறிது காலத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது துலா முறிந்துவிழுந்த்ததினால் தலையில் ஏற்றப்படட காயத்தினால் தந்தையையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்.

இவர் தனது கல்வியை கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்புவரையும் படித்துவிட்டு ஸ்கந்தவரோதயா கல்லூரியில் மேற்ப்படிப்பை தொடர்ந்தார்.

இவரது தாயார் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவரையும் இவரது அக்காவையும் வளர்த்து வந்தார். மலாயாவிலுள்ள பினாங்கில் வேலைபார்த்து வந்த இவரது தாயாரின் தம்பி இடைக்கிடை பணஉதவி செய்து வந்தார்.

இவரது தந்தையின் சகோதரி சவுந்திரம் விதானையாக கடமையாற்றிய மரியான்தம்பி ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வந்தார். அவர் தனது மகன் ராசையாவுடன் வந்து இவர்களை இடைக்கிடை பார்த்து ஆறுதல் படுத்துவார்.

இவரது அக்கா தங்கரத்தினம், வைத்திலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டு நாயன்மார்கட்டில் குடியேறிப்போய்விட்டார்.

தனது தாயாருடன் தனியொரு பிள்ளையாக வசித்து வந்தகாலத்தில் கரம்பனை சேர்ந்த சித்த ஆயுள்வேத வைத்தியர் கிருஷ்ணபிள்ளை (செல்லையா) என்பவரை தனது பத்தொன்பதாவது வயதில் திருமணம் செய்தார். அவரிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த்துவிட்டதால் அவரது இரு ஆண்பிள்ளைகளையும் தனது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். அவர்களும் இவரை அம்மா என்று அழைத்து பாசத்தைவளர்த்துக்கொண்டார்கள்.

தனது கணவருடன் இல்லறத்தில் இருந்து வந்த காலத்தில், நாகேஸ்வரி, நிலேசலாதேவி(குஞ்சுமணி), மகாதேவன் என்னும் மக்களை பெற்றெடுத்தார்.

மிகவும் துரதிஸ்ட்ட வசமாக திருமணமாகி ஐந்தே வருடங்களில் தனது கணவர் காலில் ஏற்பட்ட காயத்தால் மரணிக்க 24 வயதில் குடும்பம்பச் சுமையை தாங்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனது மூத்த புதல்வரது உதவியாலும் தனது கடுமையான உழைப்பாலும் தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

கால ஓட்டத்தில் தனது பிள்ளைகள் திருமண பந்தத்தில் இணைய தனது பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக தனது காலத்தை போக்கினார்.

மீண்டும் துரதிஸ்ட்டவசமாக ஒரு பேரனை கல்கிஸ்ஸ கடலில் குளிக்கச் செல்லும்போது காலனிற்கு பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்தார்.

பூட்டப்பிள்ளைகளின் வருகையால் மீண்டும் அவர் வாழ்வில் வசந்தம் திரும்பியது. ஆனால் மீண்டும் பேரிடியாக தனது இளைய மகளை புற்று நோய்க்கு பறிகொடுத்தார்.

மகிழ்ச்சியை விட துன்பமே அவரது வாழ்க்கையை எப்போதும் சூழ்ந்திருந்தாலும் தனது புன்னகையான சிரிப்பால் அனைவரையும் தனது இருளான பக்கத்தை மறக்கடிக்க செய்துவிடுவார்.

இப்படியாக காலம் போய்க்கொண்டிருந்தபோது, இதயத் துடிப்பில் ஏற்பட்ட மாற்றங்களிற்க்காக மருத்துவச்சிகிச்சை செய்துவந்தார். சிறிது காலம் தனது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக வயது முதிர்ந்தோர் இல்லத்தில் இருந்தார்.

அவரிற்கு இதயம் சம்பந்தமாக கொடுக்கப்படட மருந்தின் காரணமாக அவரது உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.

எனது அம்மம்மா

ஒன்றரை வயதிலிருந்து ஒன்பது வயது வரையும் எனது அம்மம்மாவுடன் கரம்பனில் வாழ்ந்த காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.

வீட்டு முற்றத்தில் தீப்பெட்டி மூடியில் களிமண்ணை நிறைத்து ரேடியோ செய்து அம்மம்மாவிடம் காட்டி அவர் “நன்றாக இருக்கிறது, கெட்டிக்காரன்” என்று புகழும்போது வரும் ஆனந்தம் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

கூட்டுப் பிரார்த்தனைக்கு கரம்பன் முருகமூர்த்தி கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளிலும், திருவிழாக்காலங்களில் முருகமூர்த்தி கோவில், பிள்ளையார் கோவில், சிவன் கோவில் போன்றவற்றிக்கு அம்மம்மாவுடன் ஒன்றாக போகும் காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.

பாடசாலை முடிந்ததும் வேலிக்குள்ளால் ஒளித்து போய் வீட்டின் பின்புறமாக இருக்கும் களிக்குளத்தில் குளிக்கும்போது ஒரு கம்போடு வெருட்டிக்கொண்டு தூரத்தில் வரும் அம்மம்மாவை கண்டதும் நனைந்த உடுப்புடன் ஓட்டமெடுக்கும்காலங்கள் இன்றும் கண்முன்னே நிற்கின்றது.

அம்மம்மாவுடன் பண்ணை பாலமூடாக பஸ்ஸில் பிரயாணம் செய்வதும், காரைநகர் பாதையூடாக பயணித்து மானிப்பாய் போவதும் என்றும் மறக்க முடியாதவை.

அம்மம்மா குசினியில் ரொட்டி சுடும் போது நடுவில் இருக்கும் கம்பத்தில் ஏறும் போது, அவர் மேல் நோக்கி என்னை பார்க்கும் பார்வை இன்றும் கண்முன்னேவருகிறது.

எனது அம்மம்மாவுடன் நான் கழித்த இளமை கால நிகழ்வுகள் அப்படி பல இருக்கின்றன.

நான் கரம்பனை விட்டு விலகி கோண்டாவிலிருந்த எனது தாய் தந்தையருடன் தங்கி யாழ் மத்திய கல்லூரியில் எனது நான்காம் வகுப்பை தொடர கரம்பன் வீதியில் எனது அம்மம்மாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, “நான் அம்மம்மா சொல்கிறேன் நீ குழப்படி விடாமல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்” என்ற வார்த்தைகள் என்னுள் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கரம்பனிலிருந்து என்னைப் பார்ப்பதற்காக யாழ் மத்திய கல்லூரி மைதான கட்டில் வந்திருந்து நான் பாடசாலை முடிந்து வெளி வரும் வரை மணிக்கணக்கில் காத்திருந்து என்னை காணும் என் அம்மம்மா என்னை எவ்வளவு நேசித்திருந்திருப்பார் என்பதை விபரிக்க வார்த்தைகள் இல்லை.

அம்மம்மாவின் மாமா மற்றும் உறவினர்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேறியதாலும், பல நாடு திரும்பிய உறவினர்கள் சிங்கப்பூர் ஓய்வூதியம் பெறுவோராதலாலும் அவரிட்க்கு அந்த நாடுகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவர் அடிக்கடி கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங், சிரம்பான், சிராங்கூன், சிங்கப்பூர் ஆகிய இடங்களை குறிப்பிடுவார்.

அம்மம்மாவின் மாமா பினாங்கில் வசித்து வந்ததால் நான் 2003 மலேசியா போயிருந்தபோது பினாங்கிட்கும், சிலாங்கூருக்கும் போயிருந்தேன். நான் திரும்பி வரும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் நீ இப்படி இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம்” என்றார்.

அண்மையில் நான் சிங்கப்பூர் சென்று திரும்பியபோது “நான் இறப்பதற்கு முதல் நீ சிங்கபூரிற்க்கு போய்விட்டாய்” என்றார். எனது அம்மம்மாவின் ஆசிர்வாதத்துடன் நான் முதன் முதலாக ஒரு மாநாட்டில் ஓர் கருத்தரங்கை நெறிப்படுத்தியது சிங்கப்பூரிலாகும்.

எனது அம்மம்மா இன்னும் எம்முடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற வேதனையான நப்பாசை என்னை வருத்திக்கொண்டிருக்கிறது.

அவர் எம்மை விட்டுச் சென்றாலும் விண்ணிலிருந்து எம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார். மறுபிறப்பெடுத்தாலும் திரும்பவும் எம்மில் ஒருவராக எம்முடனே வந்து சேர்வார்.

என்றும் அன்பு மறவாத பேரன் ராஜ்குமார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.