45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன்
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 3828 ஜூலை, 1979 – 9 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
தலைநகரிலே தங்கத் தலைவனாய்
சிறந்த சமூகத் தொண்டனாய் மக்களின்
இதயம் வென்றவன் ஐயா நீங்கள்!
இன்றுடன் காலன் உங்களை தன்னுடன்
அழைத்துச் சென்று 45 நாட்கள் ஆகியதோ!
தாய் தந்தைக்கு தலைமகனாக
சகோதர சகோதரிகளுக்கு அண்ணணாக
கட்டிய மனைவிக்கு பாசமிகு கணவனாக
அன்பு மகனுக்கு பாசமிகு தந்தையுமாய்
வழிகாட்டியுமாய் உங்கள் பணியில்
கடமை தவறியதில்லையே ஐயா!
உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள்
என்று யாவருடனும் நல்லுறவு
கொண்டீர் ஐயா!
இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்.
ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா!
மீளாத்துயிலும் நீங்கள் எப்போது
மீண்டெழுவீர்கள் என்று!
என்றாலும் இறைபாதம் அடைந்த
உங்கள் ஆத்மா அமைதி பெறட்டும் என
அகிலம் படைத்த இறைவனிடம் ஆராதனை
செய்கின்றோம் ஐயா உங்களுக்காக!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

