ஆறுதல்

நன்றி நவிலல்

கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம்

வயது 737 ஜனவரி, 1946 – 7 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
பேர்லின்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும், ஆல், அரசு, வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள், பயன்தருமரங்கள் என அழகிய சுதுமலையில் 07/JAN/1946 இல் கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் சந்திரதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சரோஜினிதேவி, மைதிலி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து யோகராஜா, கஜேந்திரன் போன்றவரை திருமணம் முடித்து வைத்து Avlyn, Ram, noelyn,Andrew, Ramja,Ebenezer, Vijay போன்ற அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்டதுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.09.2019 இல் 73 வயதில் ஜேர்மனியில் உள்ள பெர்லினில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

"சுதுமலை மண்ணின் சிரிப்பு உள்ளமே
பதுமைக் குணம் நிறைந்த உறவே
எதுகை மோனை போல்
அன்பும் பண்புமாக வாழ்ந்தீரே
வெதும்பி அழுகிறோம்
விடைதேடி தவிக்கிறோம்"

பிற அறிவித்தல்கள்

  1. 20 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.