நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா
வயது 6129 டிசம்பர், 1957 – 1 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
அனைவரிடத்திலும் அன்பையும், பாசத்தையும் எந்நாளும் காட்டும் கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
தமிழர்கள் அதிகமாக நிறைந்து வாழும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியில் செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளாக பத்மவனிதா அவர்கள் 29/DEC/1957 ஆம் ஆண்டு பிறந்தார். பத்மசுசீலா, பத்மலாஜினி, பத்மபாஸ்கரன், தர்மபாஸ்கரன், தர்மலாஜினி போன்ற தனது பாசமிகு சகோதரங்களோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், குடும்ப சூழல் காரணமாக பள்ளிக் கல்வியை மட்டுமே பயின்றார்.
முழுக் கதையையும் வாசிக்க
திருமண வயதை எட்டியதும் 1978-ஆம் ஆண்டு இரத்தினம் பிள்ளையம்மா தம்பதிகளின் பாசமிகு மகனான கிருஷ்ணபிள்ளை அவர்களை தனது குடும்பத்தினரின் வழிகாட்டுதளோடு திருமணம் முடித்து, இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் காரணமாக தட்சினி, நதீஸ், சயந்தா எனும் அன்பு செல்வங்களை பெற்று நல்ல கருத்துக்களை போதனைகளாக கூறி வளர்த்து, நன்கு அவர்களை படிக்க வைத்தார்.
வவா என சுற்றத்தாரால் அன்போடு அழைக்கப்படும் இவர், தனது பிள்ளைகள் திருமண வயதை எட்டியதும் கிருஷ்ணமூர்த்தி, நளினி, சந்திரகுமார் போன்ற நல்ல வாழ்க்கை துணைகளை அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்.
2009 இல் தனது கணவர் மறைந்த பிறகு, 2010 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், நாடகங்கள் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அபிலாஷ், சபரிஷ், ஆரியன், துபிஷன் போன்ற தந்து பேரப்பிள்ளைகளிடம் அதிகமாக பாசத்தை பொழிந்த இவர், தனது குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் என அனைவரிடத்திலும் அன்பை காட்டும் ஒரு நல்ல மனதிராக வாழ்ந்தார்.
தனது பாசத்திற்குரிய அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி 01.10.2019 இல் தனது 61 வயதில் கனடாவில் திடீரென காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற அந்த இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

