1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம்
வயது 6327 பிப்ரவரி, 1956 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி தெற்கு புதுவளவைப் பிறப்பிடமாகவும், மாவோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது , ஆனாலும் உன்
நினைவுகளோ மாளாது
மீண்டு வருவாயோ என எண்ணி
நிதம் நிதம் தவிக்கின்றோம்
தாழாது உள்ளம் என்றும்,
தனிமையிலே கலங்குகின்றோம்
மீளாத் துயிலிற்கு என்றும்
முடிவெதுவும் வாராதோ??
விழுதாய் எமைத் தாங்கி
குடையாய் நிழல் தந்து
இமைபோல் எமைக் காத்து
எங்கள் குடும்பத்தில் என்றும்
எல்லாமாய் ஆகிநின்றாய்
இன்று ஏதிலியாய் எமையாக்கி
வாழ்வதனை இருளாக்கி பாதியிலே
எமை விட்டு எங்கு சென்றாய்??
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறை பொலிகண்டியில் தெற்கில் 27/FEB/1956 இல் திரு.திருமதி கிருஸ்ணபிள்ளை அம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.செல்வநாயகம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தவமணி, திருநாமம், சிவமணி, பரஞ்சோதி, யோகநாயகம், யோகராணி, சுபேகா போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி மாம்பழம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் தர்மமலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.06.2019 இல் 63 வயதில் மாவோடையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
பொலிகண்டி மண்ணின் பொழிலே
கலிகால அவதார புருஷரே
வலி தாங்கிடும் வசந்தமே
நலிவுற்ற மக்களின் நற் சேவகனே
பலியாகி மனங்களில் படமாக வாழ்கிறீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

