31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குபேந்திரன் பாலாம்பிகை
வயது 751 ஜூலை, 1940 – 29 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குபேந்திரன் பாலாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குபேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகன், சிவனருன், ராஜன், மோகன், அருந்தா, வாணி, லவன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற ஏழு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
காலவன் உன்னை எடுத்த போது உன் அருகில்
இல்லையம்மா நாங்கள் உன் கடைசிக் காலத்தில்
கடமை செய்ய கொடுப்பனவு இல்லையம்மா!
நீ போன செய்தி கேட்டதுமே கண் கலங்கி
நின்றோமம்மா!
கண்டம் விட்டு கண்டம் ஓடி வந்தோம்
உன் உடலை பார்ப்பதற்கு
பார்த்ததுமே உன்னை கட்டி அணைத்து அழ கூட
அனுமதி இல்லையம்மா எங்களுக்கு ...
அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரன், சகோதரி, மைத்துனர்கள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு தொலைபேசி மூலமாகவும், நேரடியாக வந்தும் ஆறுதல் கூறி உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும், பத்தமேனி இளையோர் அமைப்புக்கும், வெளிநாட்டில் இருந்து எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

