1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 826 ஜூலை, 1933 – 7 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Neuilly
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கோடிகளாய் சேர்ந்து வாழ்ந்தோம் இவ்வுலகில்
இன்று தனிமையிலே வாடுகிறோம் உம் நினைவில்
மெளனத்தின் வாசலிலே மனக்குமிழி உடைகிறது
மறுபடியும் உயிர் வேண்டி மனமெல்லாம் அழுகிறது
ஆழமான அன்பையும் வேகமாக விதைத்து விட்டீர்
தேகமெல்லாம் அழுகிறது பாசமாய் உமை தேடி
நாட்களும் பறந்து செல்ல வருசமும் ஒன்றாக
வேர் இல்லா மரம் போல நடைபிணமாய் நாம் நின்றோம்
இதயத்தின் குமுறல் எல்லாம் இரவோடு கரைகிறது
சந்தனப் பேழையோடு சாம்பலாய் போகையிலே
கருகியது நாங்கள் அய்யா
இவ்வுலகம் விட்டு நீங்கள்
எங்குதான் போனீரோ- தவிக்கின்றோம் நாம் இங்கு
மலர்களாய் உமைத்தூவி விழிநீரால் தாலாட்டி
நகர்கிறது நாட்கள் இன்று
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்
ஆறாத துயரம் இது அழியாத நேசம் இது
தோல் தேய்ந்து நாமும் மறைந்து போகும் வரை
கவலை இல்லா மனிதனாய்
இருந்திடலாமோ கருவறையில்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

