மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலநாயகி சிவசுப்பிரமணியம்
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியை
வயது 8927 பிப்ரவரி, 1930 – 23 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலன் சிவா, தெய்வீகன் சிவா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதா, நிதியசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூபன், தரண்ஜா, சிவபிருந்தன், பிரதீபன், கஜனிதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்களும், மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள், பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகு சாவகச்சேரி நுணாவிலில் 27-02-1930 ஆம் ஆண்டில் குலநாயகி அழகிய குழந்தையாக இவ் ஊரில் அவதரித்தார். அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அழகு ஆண் மகனான ஆசிரியராக கடமையாற்றிய சிவசுப்பிரமணியம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து நிர்மலன் சிவா, தெய்வீகன் சிவா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்ததுடன் அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி சுதா, நிதியசக்தி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து நல்ல மாமிக்குரிய கடமையைச் செய்ததுடன் நிரூபன், தரண்ஜா, சிவபிருந்தன், பிரதீபன், கஜனிதன் போன்ற பேரபிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
இவர் யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரியில் ஆசிரியராக பல மாணவர்களை உயர் நிலைக்கு உயர்த்தி நற்சேவை செய்து ஓய்வுநிலை அடைந்தார். அத்துடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 23.04.2019 இல் 89 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
""அன்பு அம்மா
.....அனைத்தும் நீங்களே
எமது கல்வியும்
......எமது பண்பும்
எமது வாழ்வும்
....எமது மூச்சும்
அனைத்திலும் உறைந்தீர்
....அசையா நிலைத்தீர்.""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

