மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தை செல்லத்துரை
வயது 7228 ஆகஸ்ட், 1946 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தை செல்லத்துரை அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யோசப்பின்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தினி(சுவிஸ்), துஷாந்தினி(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), துஸ்யந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன்(தெய்வன்-சுவிஸ்), லிண்டன் ஜான்சன்(இந்தியா), மெரினா(பிரான்ஸ்), இலங்கைதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஜா, அனுஜா, சிந்துஜா(சுவிஸ்), அனுஸ்ரன்(சுவிஸ்), லான்சி(இந்தியா), கெலனா, லெயானா(பிரான்ஸ்), தனுயன்(பிரான்ஸ்) ஆகியயோரின் அன்புப் பேரனும்,
பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பழனி, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற றோசலியா(மணி), பெர்னதெத்(தனம்), காலஞ்சென்றவர்களான சூசைதாசன்பிள்ளை, மேரிபிரான்ஸ்சிஸ்கா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மருசலின்,S.A. பிலிப்பையா மற்றும் செபமாலை மேரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் ஜெகன் மாதா கோவில், K.K நகர், திருச்சி-21 எனும் முகவரியில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன்பின்னர் இரண்டெல்லைப் பாறை சேமக்காலையில் பி.ப 3.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய மத்திய மலைநாட்டில் புகழ் பெற்ற முத்துமாரி அம்மன் காட்சி தரும் இடமும் மூவின மக்களும் சந்தோசமாக வாழும் இயற்கை எழில் நிறைந்த மாத்தளையில் 28/Aug/1946 ஆம் ஆண்டில் குழந்தை வள்ளியம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.செல்லத்துரை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி மற்றும் பழனி, சண்முகம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் மேரியோசப்பின்(செல்லம்) என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நிஷாந்தினி, துஷாந்தினி, துஸ்யந்தன், துஸ்யந்தினி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று தெய்வேந்திரன், லிண்டன் ஜான்சன், மெரினா, இலங்கைதீபன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து தனுஜா, அனுஜா, சிந்துஜா, அனுஸ்ரன், லான்சி, கெலனா, லெயானா, தனுயன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் பிரான்ஸ் போன்றவற்றில் வாழ்ந்த இவர் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் அன்புள்ளம் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.07.2019 இல் 72 வயதில் இந்தியாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
புன்னகை முகமும்
புதுப் பொலிவும்
கண் மணி போல்
காத்தருளிய உறவே
வெண் முடியுடன்
வீரனாக விளங்கி
மண்ணில் வீழ்ந்து
மரணம் அடைந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

