ஆறுதல்

மரண அறிவித்தல்

குழந்தைவேலு கணேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குழந்தைவேலு கணேசலிங்கம்

வயது 5510 ஆகஸ்ட், 1963 – 18 மே, 2019

பிறந்த இடம்
பூநகரி
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பூநகரி மட்டுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கணேசலிங்கம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், ரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரமூர்த்தி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசோதி, ரங்கநாயகி மற்றும் இராசநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, அனுபலோகன், சத்தியலோகன், ஆனந்தலோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கிளிநொச்சியின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள் நிறைந்துள்ளதும்,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த பூநகரி மட்டுவில் மேற்கில் குழந்தைவேலு செல்லம்மா தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாக கணேசலிங்கம் அவர்கள் 10/AUG/1963 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் சுந்தரமூர்த்தி, பரமேஸ்வரி, சிவசோதி, ரங்கநாயகி, இராசநாயகி எனும் பாசமிகு உடன் பிறப்புடன் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் நவரட்ணம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் நிர்மலாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மயூரன், ரமணன் எனும் அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.05.2019 இல் 55 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

பூநகரி மண்ணின்
......பூந்தளிரே
புதுமணம் வீசும்
.......பூங் கொத்தே
குடும்பத் தலைவனே
.......குல விளக்கே
கும்பிட்டு வணங்கும்
.......கோவில் சிலையே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.