ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு23 செப்டம்பர், 1946
இறப்பு10 ஆகஸ்ட், 2019
குழந்தைவேலு மகாலிங்கம் அவர்களின் படம்

குழந்தைவேலு மகாலிங்கம்

வயது 72, முன்னாள் 5ஆம் குறுக்குத்தெரு CO முதலிகே பங்குதாரர் மற்றும் திருகோணமலை கனகம் மில் உரிமையாளர்

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருகோணமலை, கொழும்பு, இந்தியா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கொழும்பு, திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே

எம் அன்பிற்கு உறைவிடமான
எமது அருமை அப்பாவே
உம் பிரிவை நாம் சுமந்து
ஒரு வருடம் ஆனபோதிலும்

ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

மருமகன்கள், மகள்கள்- S.ஞானமோகன், G.விஜிதா, M.கஜேந்திரன், G.தயாநிதி

மகன்கள், மருமகள்கள்- M.கோபிகுமார், G.ரம்யா, M.நிசாந்தகுமார், N.கிருசாந்தி, M.டீபகரன், D.அருள்மொழி

பேரப்பிள்ளைகள்- G.ரிஷி நேத்தன், G.ஹரிணி, D.ரிதிஹாக்ஷிணி, G.கவீன், D.யவின் கௌதம், G.பிரநீதா, N.கர்ஜித்

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் 23/SEP/1946 இல் திரு.திருமதி குழந்தைவேல் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மகாலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் V.மகாலட்சுமி ,K.ராமச்சந்திரன், K.மகேந்திரன் ,B.பராசக்தி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சிவப்பிரகாசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகள் பத்மாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து விஜிதா, தயாநிதி, கோபிகுமார், நிஷாந்தகுமார், தீபகரன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று Dr.ஞானமோகன், கஜேந்திரன், ரம்யா, கிரிசாந்தி, அருள்மொழி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ரிஷிநாதன், ஹரினி, கவின், பிரனிதா, ஹர்ஜித், ரித்திஹாசினி, யவின்கௌதம் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் திருகோணமலை,கொழும்பு என வாழ்ந்து வந்த இவர் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 72 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

புங்குடுதீவின் புகழ் வீரனே
தங்க குணம் கொண்ட தோழனே
எங்கும் புகழ் வீச கல்வியில் உயர்த்தி
வங்கப் புலி போல் அழகு கொண்டு
சிங்கக் குணம் கொண்டு சிகரம் ஏற்றி
எங்கள் மனதில் தங்கினீர் தங்கமாய

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 9 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.