அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசிங்கம் பிரபாலன்
வயது 3625 ஆகஸ்ட், 1982 – 19 மே, 2019
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Sevren ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரபாலன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குலசிங்கம்(மாம்பழம்- அல்லப்பிட்டி கிழக்கு), புவனேஸ்வரி(வேலணை சிற்பனை) தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசபிள்ளை தவமணி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), குலதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாட்ஷாயினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்), பிரஷாந்தி(லண்டன்), பார்த்தீபன், சிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரித்திகா, ஹரின், ஆரோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஷனாயா, திஷேன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6 ஆம் வட்டாரத்தில் கந்தையா குலசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாக பிரபாலன் அவர்கள் 25/AUG/1982 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சசிகுமார், பிரதீபன், குலதீபன் ஆகிய உடன் பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் நடராசபிள்ளை தவமணி தம்பதிகளின் அன்பு மகள் சங்கீதா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பாலன் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் புன்னகை முகத்துடன், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.05.2019 இல் 36 வயதில் பிரான்ஸில் உள்ள Paris நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அழகிய உருவே
......அன்பு மனமே
பண்பில் சிறந்த
.......பாச உறவே
இளமை வயதில்
.......இழந்த உமை
இரங்கி அழுகிறோம்
.......இன்ப மனமே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

