மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலத்துங்கம் பூரணம்
வயது 864 செப்டம்பர், 1932 – 6 மே, 2019
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கம் பூரணம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலத்துங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஷ்வரி, நாகேந்திரம், வில்வராஜா(வில்வம்), வீரசிங்கம்(பிரான்ஸ்), ஈஸ்வரி, சிவனேஸ்வரி, லோகிதராசா, லோகேஷ்வரி(சுவிஸ்), ஆனந்தராசா(கிளி), அரசரத்தினம்(சுவிஸ்), பாகேஷ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், சர்வானந்ததேவி, புனிதவதி, மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், இந்து, வல்லிபுரம், சுமந்தினி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஞ்சனா, றமணன்(பிரான்ஸ்), ராகுலன், ராகவன், றஜிதா, பிரபாகரன், நிரஞ்சலா, பிரதீபன், ஜெகநாதன்(பிரான்ஸ்), நம்பிகை(பிரான்ஸ்), மதிவதனன்(நோர்வே), சுபாசினி(லண்டன்), கஜேந்தினி(பிரான்ஸ்), சாரங்கன்(பிரான்ஸ்), கௌரீசன்(பிரான்ஸ்), கௌசலா(லண்டன்), கௌசிகா, கௌதமி(சுவிஸ்), யானுஷா(சுவிஸ்), கௌசல்யா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), யுவன்- கோபிராம், நவீதன்,அருண்(சுவிஸ்), யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜந்தன், அர்ச்சனா, அஜீவன், டஷ்வின்(லண்டன்), தீப்தி(நோர்வே), றோகித், கிஷானா(லண்டன்), திசானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி சித்தவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் பலாலியில் 04/SEP/1932 ஆம் ஆண்டில் கோவிந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகளாக பூரணம் அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் இளையதம்பி சிவகாமி தம்பதிகளின் அழகிய ஆண் மகனான குலத்துங்கம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து நாகேஷ்வரி, நாகேந்திரம், வில்வராஜா, வீரசிங்கம், ஈஸ்வரி, சிவனேஸ்வரி, லோகிதராசா, லோகேஷ்வரி, ஆனந்தராசா, அரசரத்தினம், பாகேஷ்வரி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அக்கறை கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 06.05.2019 இல் 86 வயதில் அச்சுவேலியில் உள்ள பத்தமேனியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"பலாலியில் உதயமான
......பண்பான உறவே
பார் போற்ற வாழ்ந்த
......தாய் உள்ளமே
கூடி வாழ்ந்த
.....குல விளக்கே
வாடி வீழ்ந்தது
......என்ன செயல்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

