ஆறுதல்

மரண அறிவித்தல்

குலேந்திரசீலன் சிவசம்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குலேந்திரசீலன் சிவசம்பு

வயது 7318 ஜூலை, 1946 – 5 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
மானிப்பாய், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரசீலன் சிவசம்பு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசம்பு தில்லைநாதர் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியரெட்ணம், ரோஜாமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சினி அவர்களின அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மனோகரசீலன் ரூபா(ஜேர்மனி), பிறேமா(லண்டன்), ருத்திரா(லண்டன்), சத்தியா(இலங்கை), நிர்மலா(நோர்வே), வத்சலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிகாந்தி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

விஜிகுமார்(அவுஸ்திரேலியா), மாலினி(அவுஸ்திரேலியா), விஜயராணி, சிவநாதன், குணரெட்ணம், விஜயதரன், பரமானந்தம், ராமகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அழகிய இடமும், தேசிய உணர்வு கொண்ட மக்களும், எல்லா வளங்களும் சிறப்புற விளங்கும், மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பில் 18/JUL/1946 இல் திரு.திருமதி சிவசம்பு தில்லைநாதர் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.குலேந்திரசீலன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மனோகரசீலன் ரூபா, பிறேமா, ருத்திரா, சத்தியா, நிர்மலா, வத்சலா போன்ற உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி அரியரெட்ணம் ரோஜாமலர் தம்பதிகளின் அன்பு மகளான றஞ்சினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் யாழ்.மானிப்பாயில் தற்காலிகமாக வாழ்ந்த இவர் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கிய இவர் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி, உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.09.2019 இல் 73 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

மட்டுநகர் முத்தே
மான்புமிகு சொத்தேசிட்டு
மனம் கொண்டு
சிறகடித்துப் பறந்த
சொட்டுத் துழி பயமற்ற சொந்தமே
எட்டிநடை போட்டு
எங்கே போனீர்
வட்டமுகம் கான
வாசலிலே காத்துள்ளோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.