ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரசுவாமி காசிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசுவாமி காசிப்பிள்ளை

ஒய்வுபெற்ற இலங்கை மத்தியவங்கி கிளை மேலாளர்

வயது 8724 மார்ச், 1932 – 10 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி காசிப்பிள்ளை அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

நடேஸ்வரி(கனடா), பிரபாகரன்(கனடா), கருணாகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), உமாசந்திரிக்கா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விசுவநாதர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பஞ்சரட்ணம், சரோஜதேவி , ராதிகா, ஜெயந்தகுமார், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாநாதன், உமாபதி, பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை(குணம்), தாமோதரம்பிள்ளை, சண்முகநாதன், வேதநாயகி, தேவபாலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சின்னையா சிதம்பரப்பிள்ளை(மாஸ்டர்), சின்னையா சுப்பிரமணியம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

பவித்திரா, மிதுனன், சகானா, பானுஜா, உமேஸ், விமலன், வினுஜா, பிரவீணா, பிரதூஷா, பிரதீஷ், விதுஷன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் கடலுணவு பொருட்கள்,கால்நடை வளர்ப்பு என சிறப்பு வாய்ந்த இடம் மட்டுமல்லாது பரந்து விரிந்த நெல் வயல்களைக் கொண்டதுமான சாவகச்சேரி தனங்கிளப்பில் 24-05-1932 இல் காசிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் குமாரசுவாமி அவர்கள் விசுவநாதர் ஆகிய ஒரே ஒரு சகோதரருடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் மயில்வாகனம் கனகம்மா தம்பதிகளின் அழகு மகள் கமலாம்பாள் அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நடேஸ்வரி, பிரபாகரன், கருணாகரன், பாஸ்கரன், உமாசந்திரிக்கா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்தார். இலங்கை மத்திய வங்கிக் கிளை மேலாளராக அற்பணிப்புடன் கடமை புரிந்து ஓய்வு நிலை அடைந்தார். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கினார். பாசமாக உறவினர்களுடன் பேசி மகிழ்வதுடன் அவர்கள் நலன்களில் கவனம் செலுத்தும் மனம் கொண்ட ஒருவராக இருந்தார்.

இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10-04-2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"தனங்கிளப்பு தந்த
தவப் புதல்வனே
தந்தையாய் நின்று
தாங்கிய உயிரே
தரனியில் உயர்த்தி
பிரிந்தது ஏன்
தாங்க முடியவில்லை
தந்தையே உமது பிரிவு"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.