நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி நாகேந்திரம்
வயது 698 ஏப்ரல், 1950 – 6 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- புளியம்பொக்கணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகேந்திரம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறவுள்ளது.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி கிழக்கில் 08/APR/1950 ஆம் ஆண்டில் திரு.திருமதி குமாரசாமி அன்னம்மாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நாகேந்திரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் தாய்,தந்தை அன்பின் மடிமீது இரத்தினசிங்கம், பரமேஸ்வரி, சிவானந்தம், ஜெகதீஸ்வரி, மகேந்திரன் போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி கந்தையா இராசம்மா சின்னத்தம்பி(குருக்கள்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளான தவமணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக றஞ்ஜினி, மாலினி, நகுலன், அஜந்தன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகேஸ்வரன், சுதாகரன், சாருசா, கிருபா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து மதுசன், விதுசன், றனுசன், கிதுசன், யதுசன், நிதுர்சன், தனுசன், தினுசன், தினுசா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இலங்கை போக்குவரத்து சபையில் சேவை செய்து ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்து மனம் கொண்டவரும், தொலைக்காட்சி பார்ப்பதும்,தோட்டவேலை செய்வதும்,பேரப்பிள்ளைகளோடு விளையாடி அவர்கள் குறும்பில் மகிழ்ந்திருந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.10.2019 இல் 69 வயதில் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
சாவகச்சேரி தந்த சரித்திர உறவே
பாவம் செய்யாத பக்குவ மனமே
கோவம் அற்ற குழந்தை உள்ளமே
காலம் உள்ளவரை மனங்களில் நிலைத்து
காவல் தெய்வமாய் காத்தருள்வீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

