மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி இராசலிங்கம்
ஓய்வுபெற்ற கட்டட பரிசோதகர்
வயது 883 ஆகஸ்ட், 1930 – 6 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசலிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற Dr. தயாளினி(பிரித்தானியா) மற்றும் அகிலேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சதானந்தன், செல்வநாயகம் மற்றும் நகுலாம்பிகை(கனடா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தாமோதரம்பிள்ளை, தங்கரத்தினம், நாகலட்சுமி, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குலநாதன், ரமேஷ், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதமன், சிவான், ரிசிகேசன், அக் ஷாயினி, மாதேஷ், விபித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த ஏழாலையில் புகழ் பூத்த சீமான் குமாரசாமி அவர்தம் பாரியார் கனகம்மாக்கும் அருமைப் புத்திரனாக 03/AUG/1930 ஆம் ஆண்டில் திரு.இராசலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் பரமேஸ்வரி, சதானந்தன், செல்வநாயகம், நகுலாம்பிகை, கமலாதேவி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சகோதரர்களுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி சிவகுருநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக சுகந்தினி, Dr.தயாளினி, அகிலேஸ்வரன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக குலநாதன், ரமேஷ், சிந்துஜா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கௌதமன், சிவான், ரிசிகேசன், அக்ஷாயினி, மாதேஷ், விபித்திரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கட்டட பரிசோதகராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 06.06.2019 இல் 88 வயதில் கோண்டாவில் மேற்கில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"ஏழாலை மண்ணின்
........ எழில் அழகே
வாழ்வில் நேர்மையுடன்
.......வாழ்ந்த உறவே
காழ்புணர்ச்சி அற்ற
........கடவுள் உள்ளமே
கருணை மனமே
.....கலங்க வைத்தீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

