ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரசாமி செல்வரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசாமி செல்வரட்ணம்

வயது 7514 பிப்ரவரி, 1944 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வரட்ணம் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமாரன், சதிஸ்குமாரன், சர்மிளா, நிசாந்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உசாதேவி, அபிராமி, ஜொனி சங்கர், திவிசாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகராசா, செல்வராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜீரா, ஷயன், சபினா, ஏயிசாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், வாழைத் தோட்டங்கள் என அழகு நிறைந்த வதிரி மணியாவத்தையில் 14-02-1944 இல் குமாரசாமி இரத்தினம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் செல்வரட்ணம் அவர்கள் நாகராசா, செல்வராசமணி ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அழகுப் பெண்ணான சறோஜினிதேவி அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சுகுமாரன், சதிஸ்குமாரன், சர்மிளா, நிசாந்திகா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அண்ணாம்பி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 75 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"கண்ணாடி வதனமே
.....கலங்கா உள்ளமே
வதிரி மைந்தனே
.....வாட மலரே
புன்னகை உதடே
....பூவிழிப் பார்வையே
உம் புகழ் மங்காது
... உம் பூவுடல் மறக்காது "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.