ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

குமாரவேலு  உதயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரவேலு உதயகுமார்

வயது 544 நவம்பர், 1964 – 29 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Bad Wildungen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் , ஜேர்மனி Bad Wildungen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரவேலு உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆனது அப்பா
மாநிலத்தில் நீங்கள் பிரிந்து!
தீராத துயரத்தில் தேம்புகின்றோம்
நாம் இங்கு!

வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.

நீங்கள் மறைந்த நாள் முதலாய்
நிம்மதி எங்களுக்கு இல்லை அப்பா!
நினைவிழந்து செயலிழந்து
நிற்கதியாய் நிற்கின்றோம் அப்பா!

என்றுமே நீங்கள் செலுத்திய அன்பும்
அரவணைப்பும் மாறாது எந்நாளும்
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள் தெய்வமாய் வீற்றிருப்பீர்கள்!

உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இயற்கை எழில் மிகுந்த இடமும் தமிழர் பண்பாடு,பாரம்பரியம் போற்றப்படும் யாழ்ப்பாணத்தின் உரும்பிராயில் 04/NOV/1964 ஆம் ஆண்டில் திரு.திருமதி குமாரவேலு சிவபாக்கியவதிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.உதயகுமார் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ஜெயக்குமார், றஜனி, ராஜ்குமார், பிரேம்குமார், வதனி, விஜயக்குமார், சாந்தி போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி வெற்றிவேலு தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ரவிந்திரமாலா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பிரதீப், பிரவினா, பிரமிலன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மரிலினா என்பவரை திருமணம் முடித்து வைத்து தயிரீஸ், தியானா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கடின உழைப்பாளியான இவர் புத்தகங்கள் வாசிப்பதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.09.2019 இல் 54 வயதில் ஜேர்மனியில் உள்ள Bad wildungen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அழகு ஓவியமே ஆருயிர் தெய்வமே
பழகிப் பார் பாலின் இனிமை போன்றவன்
உழைத்து உயர்ந்தவன் ஊருக்கு உதவியவன்
நினைத்துப் பார்க்கையில் கண்ணீர் ஓடுது
நீங்கள் இன்றி நாங்கள் தவிக்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 28 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.