மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு விநாயகமூர்த்தி
கணக்காய்வு அத்தியட்சகர்- இலங்கை, CIBC உத்தியோகத்தர்- கனடா
வயது 6923 அக்டோபர், 1949 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு விநாயகமூர்த்தி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மதியாபரணம்(JP- புங்குடுதீவு) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகசுந்தரி(யோகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மப்பிரியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நல்லசிவம்பிள்ளை மற்றும் பசுபதிப்பிள்ளை, விஜயலெட்சுமி, கனகசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளமதி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம்,கடலுணவு,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நயினாதீவில் 23/OCT/1949 ஆம் ஆண்டில் குமாரவேலு பராசக்தி தம்பதிகளுக்கு அன்பு புதல்வனாக விநாயகமூர்த்தி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார். அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நல்லசிவம்பிள்ளை, பசுபதிப்பிள்ளை, விஜயலெட்சுமி, கனகசேகரம்பிள்ளை போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் புங்குடுதீவு JP மதியாபரணம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் யோகசுந்தரி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து பத்மப்பிரியா, ஐங்கரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இவர் இலங்கை கணக்காய்வு அத்தியட்சகராகவும்,கனடா CIBC உத்தியோகத்தராகவும் கடமையாற்றியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு மனைவி,பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.05.2019 இல் 69 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கணக்கில் சிறந்த
......அறிவு உள்ளமே
காவல் தெய்வமாய்
.......வாழ்ந்த செம்மலே
உழைத்து உயர்ந்த
........உன்னத உள்ளமே
காலம் உள்ளவரை
......மறந்திடாத் தெய்வமே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

