நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரட்ணம் கந்தசாமி
ஓய்வுபெற்ற A.P.C ஊழியர்
வயது 7820 டிசம்பர், 1940 – 18 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்ப தலைவரின் மரணச்செய்தியை கேட்டு ஓடோடி வந்து உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்ற இணையத்தளங்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த உடுப்பிட்டியில் 20/DEC/1940 இல் திரு.திருமதி கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.குணரட்ணம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்லமுத்து, செல்வராசா, ஜெயரட்ணம், அரசரட்ணம், பாலகிருஷ்ணன், கமலாதேவி,குலேந்திரன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான உடுப்பிட்டி பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் பரமேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஸ்ரீதர், சுஜீவா, சுதாகர் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சுகன்யா, ஜெயக்குமார், அபிராமி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ஷானுகா, ஷரீனா, நர்த்தனா, தக்ஷனா, யாதவன், அச்சுதன், ஐவாசக்தி, அமியாலஷ்மி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் A.P.C ஊழியராக இருந்து ஓய்வு பெற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.08.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Stouffville நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
வடமராட்சி மண்ணின் வள்ளல் உறவே
கடமையே கண்ணான கருணை உறவே
இடர் வரும்போது இயல்பாக காத்து
படர்ந்தீரே மனதில் பசுமை நினைவாக
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

