மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குருநாதி கதிரேசு
இளைப்பாறிய அதிபர், முன்னாள் தலைமை ஆசிரியர்- வயாவிளான் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலை, மானம்பிராய் பிள்ளையார் கோவில் பரிபாலனசபை முன்னாள் செயலாளர்
வயது 972 ஜனவரி, 1922 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குருநாதி கதிரேசு அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், குருநாதி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம்(கிளி ரீச்சர்- முன்னாள் ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, ரேவதிதேவி, குகதாஸ்(சுவிஸ்), மோகனாதேவி, பிரேமாதேவி, விமலாதேவி, வசந்தாதேவி, விஜயகுமாரி, சாந்தகுமாரி(சுவிஸ்), நந்தகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியசீலன், கோசலா(சுவிஸ்), ஜெகதீஸ்வரன், சதாசிவம், சிவகுமார், அலோசியஸ், உதயகுமாரன், சந்திரகுமாரன்(சுவிஸ்), யோகேஸ்வரி ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்ற குருநாதி முருகேசு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சாருஜன், நிரூஜா, நிராகுலன், Kareeshan-Annai, Kareeshiga, Ajanthan-Shinthu, Ashley-Gowresh, Jaysan, Tysan, Kesei, Durga, Chrishan, Robina, Vimogchen, Keshani, Ajith, Vinith, Arjun, Abirami ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 முதல் பி.ப 02:00 மணிவரை Lotus Funeral and Cremation Centre எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வயாவிளானில் 02/Jan/1922 ஆம் ஆண்டில் திரு.திருமதி குருநாதி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கதிரேசு அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் குருநாதி முருகேசு எனும் உடன்பிறப்புடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளான ஆசிரியை தங்கரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக இந்திராதேவி, ரேவதிதேவி, குகதாஸ், மோகனாதேவி, பிரேமாதேவி, விமலாதேவி, வசந்தாதேவி, விஜயகுமாரி, சாந்தகுமாரி, நந்தகுமாரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சத்தியசீலன், கோசலா, ஜெகதீஸ்வரன், சதாசிவம், சிவகுமார், அலோசியஸ், உதயகுமாரன், சந்திரகுமாரன், யோகேஸ்வரி என்பவரை திருமணம் முடித்து வைத்து சாருஜன், நிரூஜா, நிராகுலன், Kareeshan - Annai,kareeshiga, Ajanthan-shinthu,Ashley-Cowresh, Jaysan, Tysan, kesei, Durga, Chrishan, Robina, Vimogchen, keshani, Ajith, Vinith, Arjun, Abirami போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் வயாவிளான் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், மானம்பிராய் பிள்ளையார் கோவில் பரிபாலனசபை செயலாளராகவும் சேவையாற்றிய இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.10.2019 இல் 97 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
“கல்விச் செல்வம் நிறைந்த கருணை உறவே
அன்பின் வழியில் சென்ற அருமை உயிரே
நின்தன் சிரிப்பை முகத்தில் நித்தம் காட்டி
எங்கள் மனதை மகிழ்வித்த எமது உள்ளமே
எங்கே சென்றீர் இப்போது எமைப் பிரிந்து”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

