3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டியர் நாகமுத்து
Star Metal Crusher & Rice Mill - உரிமையாளர்
வயது 9426 மே, 1925 – 4 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டியர் நாகமுத்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எங்களை வானுயர பெயர் விளங்க வைத்த
எங்கள் அன்புத் தெய்வமே
ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து
மூன்றாண்டுகடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் புன்னாலைக்கட்டுவன் தெற்கில் 26/MAY/1925 ஆம் ஆண்டில் திரு.திருமதி குட்டியர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நாகமுத்து அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் சின்னப்பிள்ளை, பொன்னையா, செல்லத்துரை, தம்பிப்பிள்ளை, சின்னத்தங்கச்சி, செல்வரத்தினம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் பறுவதம்(பாக்கியம்) என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வரதராஜன், தயாளன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஸ்ரீரதி, தயாபரி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து பார்த்தீபன், கஜந்தா, அனுஷா, பிரவீன், ஜனனி, ரதுஷன், மிதுஷா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் star metal crusher & Rice mill உரிமையாளரான இவர் அன்புள்ளம் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.07.2019 இல் 94 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
புன்னாலை மண்ணின்
புன்னகை உறவே
அன்னம் போல்
அழகாக வாழ்ந்த
வண்ண உயிரே
வாசல் விளக்கே
எண்ணிய போல் வாழ்ந்து
எமை விட்டுப் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

