நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லலிதா துரைராஜா
வயது 7721 பிப்ரவரி, 1942 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில் கிழக்கில் 21/FEB/1942 இல் திரு.திருமதி நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகளாய் லலிதா அவர்கள் ராதா, வசந்தா, சுகிர்தா போன்றவர்களின் அன்புச் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வைத்திலிங்கம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனான நீர்வேலி திரு. துரைராஜா வைத்திலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக அனுஜா, மயூரன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து அருள்முரளி(வைத்திய நிபுணர்),சுவர்ணா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அருள்விபூஷன், அருள்நிமேஷிக்கா, வளவன், எயிடன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன்,அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்03.08.2019 இல் 77 வயதில் கொக்குவிலில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கொக்குவில் தந்த
குல விளக்கே
பக்கம் இருந்து
பண்புடன் பேசிய
எங்கள் உறவே
தங்க உறவே
எங்கே போனீர்
எமைப் பிரிந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

