1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
லலிதாவதி சுப்பிரமணியம்
வயது 6315 மார்ச், 1956 – 11 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிதாவதி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயிலிலே
மனை சிறக்க வாழ்ந்த - எம்
அன்னையேஓராண்டு காலம்
உருண்டோடிப்போனாலும்
உங்கள் அழியாத நினைவுகள்
நீங்காது எம் தாயே
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
வேதனைகள் வேர்வரை சென்றாலும்
விழுதுகளாய் எம்மைத் தாங்கினாய்
உன் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள்- உன்
காதுகளில் கேட்கிறதா
உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய்
பணம் தேடி அலையும்
பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட
யார் உள்ளனர் இப் பூமிதனில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

