மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி அற்புதமலர் நடராசா
வயது 9021 மார்ச், 1929 – 15 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- சிங்கப்பூர்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் வடக்கு இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி அற்புதமலர் நடராசா அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி குனரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரிதேவி(இலங்கை), சரஸ்வதிதேவி(கனடா), குகதேவன்(நெதர்லாந்து), வரதராஜன்(நெதர்லாந்து), கலைவாணிதேவி(கனடா), மகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிரேமச்சந்திரன், ஜெகநாதன், சாந்தி, ஜெயந்தி, சுகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரேமசசியினி- சுந்தர், துளசிதரன்- வசந்தாதேவி, பிரபாகரன்- சிரோணி, ஜெகப்பிரியா- கதாகரன், வெங்கடேசன்- சர்மிளா, டசிதரன்- துசிக்கா, சுதர்சனன்- ஜானுப்பிரியா, சிந்துஜா- பிறயன், லெனி- மைக்கல், தர்சினி, நிருஜன், மரியா- தனுஸ், கத்தரினா- கஜேந்திரன், ஐங்கரன், ஜொகான்சன், சாரா, லேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுமித்ரா, சுசித்ரா, பிரசுன், பிரவின், சாய்நாத், சாய்வரன், தமிரா, டரியன், அபிநயா, அபீஸ், அபிலயா, மயூரிகா, சர்விகா, மைலா, நோவா, அஸ்வினி, அக்ஸரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
உலகில் அழகிய நாடும் தென் கிழக்காசியாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய தரிப்பிட நாடும் தமிழை ஆட்சி மொழியாக கொண்டதும் வியாபாரத்தின் மையமாக உள்ள சிங்கப்பூரில் 21-03-1929 இல் திரு. திருமதி குனரட்ணம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக லில்லி அற்புதமலர் அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி.செல்லப்பா தம்பதிகளின் அழகு மகனான ஆசிரியப் பணி செய்த நடராசா என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஈஸ்வரிதேவி, சரஸ்வதிதேவி, குகதேவன், வரதராஜன், கலைவாணிதேவி, மகநாதன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன்,சுவையான உணவுகள் செய்வதிலும்,வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.
இவ்வாறு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.04.2019 இல் 90 வயதில் கோப்பாய் வடக்கு இலகடி எனும் இடத்திலுள்ள தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"சிங்கப்பூர் தந்த
அழகுச் சிட்டு
சிகரம் தொடப்
பாதை காட்டி
சிரிச்சுப் பேசி
அன்பைக் கூட்டி
சிலை யானீர்
எமது மனதில்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

