மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி புஷ்பம் இம்மானுவெல்
வயது 703 ஜூலை, 1948 – 28 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட லில்லி புஷ்பம் இம்மானுவெல்அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து இமானுவெல் அவர்களின் அன்பு மனைவியும்,
லெயோனார்ட்(அவுஸ்திரேலியா), லெயோனாரா(இலங்கை), லெயோநிஷா, வினோ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோச், காலஞ்சென்றவர்களான அன்ரன், செபமாலை மேரி(தங்கராணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நொயலின்(அவுஸ்திரேலியா), ஜீட்(இலங்கை), வசந்த்(இலங்கை), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செபமாலை மேரி(லண்டன்), சூசைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஷ்(இந்தியா), ரமேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
வசந்தா, நிர்மலா, காலஞ்சென்ற ஜோன்பிள்ளை ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
கிளாறற்(கொலண்ட்), ஆனந்தன்(கொலண்ட்), ஜீலியற்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஜீவித்தி, அபினா(இலங்கை), லிதுஷா(அவுஸ்திரேலியா), அன்ரலினா விக்டர், தமாரா, கெப்ஸிபா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் மிளகாய் தோட்டங்களும்,மரக்கறித் தோட்டங்களும்,அழகிய இறங்கு துறையும் கொண்ட ஊர்காவற்துரையில் 03/JUL/1948 ஆம் ஆண்டில் அழகிய குழந்தையாக லில்லி புஷ்பம் அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் றோச், அன்ரன், செபமாலைமேரி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அழகு ஆண் மகனான பர்னாந்து இமானுவெல் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து லெயோனாட், லெயோனாரா, லெயோநிஷா, வினோ எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
இவர் தனது குடும்பத்தில் அக்கறை கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
இவ்வாறு கணவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.04.2019 இல் 70 வயதில் கொழும்பில் உள்ள வெள்ளவத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
"அன்பு அம்மா
......அழகிய உயிரே
அன்பு மனமே
......அணைக்கும் உறவே
எங்கள் உணர்வில்
....என்றும் கலந்த
அழகிய வதனம்
.....பிரிந்தது ஏன்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

