மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லூட்ஸ் விஜயரட்ணம்
வயது 9724 நவம்பர், 1921 – 28 மே, 2019
- பிறந்த இடம்
- இளவாலை பத்தாவத்தை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லூட்ஸ் விஜயரட்ணம் அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, பேர்னடேற் தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்ற டயனிஸ் தம்பு, றோசாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
ஜெயா(மேரி- கனடா), ராஜகுலேந்திரன்(ராஜன்- லண்டன்), விஜயகுமாரி(விஜி- கனடா), காலஞ்சென்ற விஜயராணி(ராணி), விஜயதேவி(தேவி- ஜேர்மனி), விஜயசீலன்(சீலன்- கனடா), விஜயமோகன்(மோகன்- இலங்கை), விஜயசீலி(மாயா- கனடா), காலஞ்சென்ற விஜயமோகினி, விஜயராஜி(ராஜி- கனடா), விஜயதன்(யோய்- ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வண மேரிஜோசப் அடிகள்(இலங்கை), ஜெயசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா, கொன்சி, சௌந்தரராஜன், காலஞ்சென்ற செல்வராஜா, ஜெயசிங்கம், அனுஷா, பிறின்சி, சிவா, ராஜன், ராஜனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம், மாகிறெற், தர்மரெட்ணம், அரசரெட்ணம், குணரெட்ணம்(கனடா), அருள்லீலிநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவியா- றெஜி, யொஸ்லி- மயூரன், எழினா- தவம், லூபி(தர்மிளா), சியாமளன்- டிலூஷா, பிறேமிளா- ஜோர்ஜ், நீல்- சுஜா, நீனா- செந்தூரன், சாகீஷன், டீசா, விதூஷன், நிருஷன், தர்ஷன்- தனுஷியா, நிருஷன், அஞ்சலி, அடலினா, றஸ்லினா, மிசேலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரைறா, ஒஸ்ரன், ரிஷி, ஆஷ்லி, ரிஸ்ரன், ரியானா, ரேஜா, ஒலிவர், போஷா, பிரஸ்ரன், பிறின்ஸ், நியூஷா, ஷகின், கைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள்,புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இளவாலை பத்தாவத்தையில் 24/NOV/1921 ஆம் ஆண்டில் கபிரியேல்பிள்ளை பேர்னடேற் தம்பதிகளின் அன்பு மகளாக லூட்ஸ் அவர்கள் வண மேரிஜோசப் அடிகள்,ஜெயசிங்கம் போன்ற சகோதரர்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும், டயனிஸ் தம்பு றோசாப்பிள்ளை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான விஜயரட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து ஜெயா, ராஜகுலேந்திரன், விஜயகுமாரி, விஜயராணி, விஜயதேவி, விஜயசீலன், விஜயமோகன், விஜயசீலி, விஜயமோகினி, விஜயராஜி, விஜயதன் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், ஆனந்தராஜா, கொன்சி, சௌந்தரராஜன், செல்வராஜா, ஜெயசிங்கம், அனுஷா, பிறின்சி, சிவா, ராஜன், ராஜனா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ராசாத்தி என அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.05.2019 இல் 97 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"இளவாலை தந்த
.......இழகிய உறவே
இன்முக மலரே
.......இளமை வசந்தமே
கவலைகள் போக்கிய
....... கருணையின் வடிவே
கலங்க வைத்து
.........கர்த்தரிடம் சென்றீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

