மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லூக்காஸ் வில்சன்
வயது 4415 மே, 1975 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Catford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூக்காஸ் வில்சன் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லூக்காஸ்(இரத்தினம்), அந்தோனியார் பிள்ளை(அழகு) தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினஜோதி(குட்டி) சுலோசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோயினி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
வினுபா, விதுசனா, காலஞ்சென்ற விதுசன் மற்றும் வினுக்கா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விஜி மற்றும் வினோ(லண்டன்), ரவி(சுவிஸ்), பாபு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டயான்(லண்டன்), சந்திரிக்கா(குட்டி), சுவைடா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராஜா, சொப்னா(இத்தாலி), னோனி, ஜெஸ்லி, சூட்டி, யூலி, ஜெந்தினி, செல்வன், ராஜ்குமார், தயா(குருநகர்), நிசாந்தன்- துசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டயானா, டினோஜன், டிலானி(லண்டன்), வெனிஸ்ரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ரகுலன், ரனுசா, ஜெவிசன், றொக்சன், லொயிக்கா(சுவிஸ்), கியூபா, கீயூமன், கீர்த்தனா, கிஷான், சுதர்சன், சுபா, கல்கி, அருண், அபிஷேக், அபிசா, அபிசனா(குருநகர்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அருணா, லெபோன்சியா, விதுசா, கலிஸ்டன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அன்மையில் உள்ள இடமும் கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் இடமும்,வீரமும் எழுச்சியும் கொண்ட மக்களும்,கடலுணவு நிறைந்து காணப்படும் குருநகரில் லூக்காஸ் அந்தோனியார்பிள்ளை தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாக வில்சன் அவர்கள் 15/may/1975 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் மழலையாக அவதரித்தார். அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விஜி, வினோ, ரவி, பாபு ஆகிய உடன் பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் இரத்தினஜோதி சுலோசனா தம்பதிகளின் அன்பு மகள் சறோயினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வினுபா, விதுசனா, விதுசன், வினுக்கா, ஸ்ரெபான் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் குட்டி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் புன்னகை முகத்துடன், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.05.2019 இல் 44 வயதில் பிரித்தானியாவில் உள்ள Catford Lewisham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
"குருநகர் மண்ணின்
......குத்து விளக்கே
அணையாது உலகிற்கு
.......ஒளி பரப்பி
இன்பங்கள் தந்த
.......இனிமை உறவே
இரங்கி அழுகிறோம்
.......இன்ப நினைவுடன்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

