மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லக்ஷி நந்தகுமார்
வயது 3229 மே, 1984 – 3 மார்ச், 2017
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷி நந்தகுமார் அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணேசலிங்கம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நந்தகுமார்(சின்னத்துரை சிற்பாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோதீவன்(கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை), ரெஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஜித்(பிரான்ஸ்), திலக்(பிரான்ஸ்), டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிருஜா(பிரான்ஸ்), சரண்ஜா, சுதர்சன், ஜெயக்குமார், ஜெயா, வரதா, கௌரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிகரன், சயந்தன், சுரேன், தயாழினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
சொபிஷன், அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கிருசோபன், மதுசன், சந்தோஷ், தாரங்கி, தார்மேகன், அஷ்வின், அஷ்விகா, அக்ஷரா(கனடா), அஸ்விதா, அக்ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
கவிஷனா, லபிஷா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 118,
சிவப்பிரகாசம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

