மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லக்ஸ்மிகாந்தா ஜீவகன்
முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி
வயது 648 மார்ச், 1955 – 13 மே, 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Eastham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஸ்மிகாந்தா ஜீவகன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(Post master), அன்னலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(D. Director of Irrigation Dept- Ceylon) மாதுராதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜீவகன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கந்ததாஸ்(சுவிஸ்), ஆறுமுகதாஸ்(பிரான்ஸ்), சாரதா(கனடா), லலிதா(இங்கிலாந்து), வசந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசரஸ்வதி, கணேசலிங்கம்(இலங்கை), விஜயலக்ஷ்மி தர்மலிங்கம்(இங்கிலாந்து), ஜெயலக்ஷ்மி கனகரட்னம்(இலங்கை), ராஜலஷ்மி தேவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஜெயதேவன், நாவுக்கரசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி(சுவிஸ்), சுந்தரி(பிரான்ஸ்), பத்மநாதன்(கனடா), சண்முகராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்ற பாலசந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
திலகவதி தங்கராஜா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
ரூபன்(கனடா), சுகலியா(கனடா), முகுந்தன்(கனடா), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துசிதா(கனடா), அனுஷ்கா(இங்கிலாந்து), கௌதமன்(கனடா), Roshan(நோர்வே), Rahul(நோர்வே), Rohith(நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும்,
துதிராஜ்(கனடா), Thomas(சுவிஸ்), ஜெகதா(பிரான்ஸ்), புவிதாஸ்(பிரான்ஸ்), சஜிதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வட்டுக்கோட்டை சங்கரத்தையில் 08/MAR/1955 ஆம் ஆண்டில் Post Master கந்தசாமி அன்னலக்மி தம்பதிகளுக்கு அன்பு மகளாக லக்மிகாந்தா அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் கந்ததாஸ், ஆறுமுகதாஸ், சாரதா, லலிதா, வசந்தா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் பெரியதம்பி மாதுராதேவி தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான ஜீவகன் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் காந்தா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக கடமை செய்ததுடன் தனது குடும்பத்தில் அன்பு கொண்டவராகவும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், உறவுகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.05.2019 இல் 64 வயதில் பிரித்தானியாவில் உள்ள Eastham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"சங்கரத்தை தந்த
......சரித்திர உள்ளமே
சந்தனப் பேழையே
......குங்குமக் கலரே
அறிவில் சிறந்த
....ஆசிரிய உறவே
ஆண்டவன் அடியில்
......அன்புடன் இளைப்பாறுக"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

