ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா மண்டலேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா மண்டலேஸ்வரி

வயது 789 பிப்ரவரி, 1941 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
Mitcham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி வதிரி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மண்டலேஸ்வரி அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிருட்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, மாலினி, சாந்தினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, காலஞ்சென்ற சிவஞானதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தங்கமணி, பரமேஸ்வரி, நவரத்தினராசா, தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தவராணி சந்திரா, கணேசரட்ணம் மற்றும் ஆறுமுகாநந்தன், தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா, பபி, விஜிதா, நகுலன், தக்‌ஷா, தயானி, செந்தூரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

ரவின், ஜெகன், கோபி, சிறி, சுவப்னா, கபிலன், கார்த்திகா, கீத்தன், சிவகுமாரன், சிவகுமார், தாஸ், சுதன், நிவ்யா ஆகியோரின் அன்பு அத்தையும்,

கோசிகா, கோகுலன், மதுனிஷா, திவானி, பிரவிந்த், புருசோத், ரமணன், அரவிந்த், அபிராமி, அசோக், ஆகாஷ், அபிஷா, காவியா, சகானா, ஆதித்யா, நயனிகா, கவிஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டி வதிரியில் 09/FEB/1941 இல் சந்திரசேகரம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் மண்டலேஸ்வரி அவர்கள் சிவபாலசுப்பிரமணியம், தங்கமணி, பரமேஸ்வரி, நவரத்தினராசா, தேவி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கிருட்ணபிள்ளை கதிராசி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான செல்லையா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பவானி, மாலினி, சாந்தினி, செல்வகுமார் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, சிவஞானதாஸ் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.07.2019 இல் 78 வயதில் பிரித்தானியாவில் உள்ள Mitcham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வதிரி மண்ணில்
வந்தாய் மலராய்
எதிரியையும் நேசிக்கும்
இரக்க குணமாய்
கதிரவன் போல்
ஒளி முகமாய்
பதிபக்தியுடன் வாழ்ந்து
பாதியில் பிரிந்தீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.