ஆறுதல்

மரண அறிவித்தல்

மகாலெட்சுமி துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகாலெட்சுமி துரைராஜா

வயது 8527 ஜூன், 1933 – 19 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
இளவாலை பெரியவிளான், Iford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், இளவாலை பெரியவிளானை வசிப்பிடமாகவும், லண்டன் Iford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி துரைராஜா அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தாதேவி(இலங்கை), சாந்தி(ஜேர்மனி), குருபரன், குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா சபாபதிப்பிள்ளை, ராஜலெட்சுமி வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீகௌரிபாலா(இலங்கை), மாணிக்கவாசகர்(ஜேர்மனி), சுதா, யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபன், மயூரன், லங்கீர்த்தன்- பத்மபிரியா, மனோசாந், வினோசாந், ஜாதவி, ஷாஜவி, கிரீஷன், கிரித்திக், கன்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்னிகா, சஷ்வின், ரஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், நெல்வயல், வாழைத்தோட்டம், புகையிலைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சண்டிலிப்பாய் ஆலங்குளாயில்27-06-1933 இல் சபாபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக மகாலெட்சுமி அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் தியாகராஜா, ராஜலெட்சுமி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அழகு மகனான துரைராஜா என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து சுகிர்தாதேவி, சாந்தி, குருபரன், குமரன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும் விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19-04-2019 இல் 85 வயதில் பிரித்தானியாவில் உள்ள Iford நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அழகிய வதனம்
அன்பு மனம்
கண்ணாடி முகம்
கனிவான பேச்சு
சிரித்துப் பழகும்
சிந்தனை மனமே
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
சிரத்தில் உறைந்தவரே."

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.