ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசம்மா மகாராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசம்மா மகாராஜா

வயது 8512 அக்டோபர், 1933 – 9 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, Bromley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா மகாராஜா அவர்கள் 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

மகாராணி, மகேந்திரராஜா, பத்மராஜா, பத்மராணி, திவ்வியராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பார்வதிப்பிள்ளை(லட்சுமி) மற்றும் பொன்னம்மா(ஜானகி), ரத்தினம்(பப்பம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நித்தியானந்தன், இராஜேஸ்வரி, சத்தியகீர்த்தி, காலஞ்சென்றவர்களான கமலாராணி, தர்மராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்பிரமணியம், முத்துசிங்கம், சண்முகம், நீலாதாட்சி, வேலுப்பிள்ளை,முத்துலிங்கம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாளகுமார், அருந்தவசோதி, அருட்சோதி ஜெயசோதி, சிவபாலசோதி, ஆனந்தசோதி, காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், லோகநாயகி, அருந்தவநாதன், குபேரன் மற்றும் பராசக்தி, சாரதாதேவி, சறோஜினிதேவி, மாலினி, மாலதி, சிறிதரன், தயாளினி ஆகியோரின் சிறிய தாயாரும்,

மாலதி, மாதவன், மணிவண்ணன், மைதிலி, நரேஷ் ஆகியோரின் பெரிய தாயாரும்,

துளசி, குருபரன், விஷ்ணு, லுசிபன், லூசாந்தன், தாரணி, மயூரன், றொக்‌ஷி, றொஷான், திபினி, அபாஷினி, பிரியங்கா, தர்ஷிகா, நிவேதிகா, சுபாங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அனிஷா, ஹரி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டியில் 12/OCT/1933 இல் திரு.திருமதி சிதம்பரபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளாய் இராசம்மா அவர்கள் செல்லம்மா, பார்வதிப்பிள்ளை, பொன்னம்மா, ரத்தினம் போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகன் திரு.மகாராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மகாராணி, மஜேந்திரராஜா, பத்மராஜா, பத்மராணி, திவ்வியராணி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து நித்தியானந்தன், இராஜேஸ்வரி, சத்தியகீர்த்தி, கமலாதேவி, தர்மராஜ் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து துளசி, குருபரன், விஷ்ணு, லுசிபன், லுசாந்தன், தாரணி, மயூரன், றொக்ஷி, றொஷான், திபினி, அபாஷினி, பிரியங்கா, தர்ஷிகா, நிவேதிகா, சுபாங்கி எனும் பேரப்பிள்ளைகளுடனும், அனிஷா, ஹரி போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.08.2019 இல் 85 வயதில் பிரித்தானியாவில் உள்ள Bromley நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

கரவெட்டி மண்ணின் கண்ணாடி இதயமே
கரம் பற்றி வாழ்ந்த கரங்ளைப் பிரிந்து
வரம் வேண்டிக் கிடைத்த வாழ்வின் செம்மலே
நிறம் மாறா பூவே நிஜமாகப் பிரிந்தீரே
நிம்மதி வேண்டி அலைகிறோம் இன்று

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.