ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேந்திரன் செல்வராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேந்திரன் செல்வராணி

வயது 6226 ஜூலை, 1956 – 5 ஜூலை, 2019

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
மல்லாவி, Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரம் செல்வராணி அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசிங்கம், தவமணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

மகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வக்குணராசா, தெய்வேந்திரராசா, செல்வேந்திரராசா, காலஞ்சென்ற அருளானந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபன், கலைமதன், தம்ஜா, அஜின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதீசன், குமுதா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணலிங்கம், மதி, அப்பன், காலஞ்சென்ற பரமானந்தம், குணம், தங்கரட்ணம், ரஞ்சனா, பொன் இன்பராணி, புஸ்பாதேவி, நிர்மலாதேவி, பத்மாதேவி, மனோன்மணி, பாஸ்கராதேவி, நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியா, ஆதிரன், காவியா, கவினயா, அனிஷ், சாதனா, தருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல்நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் அருள் பாலிக்கும் இடமான தொண்டமனாறு மயிலியதனையில் 26/JUL/1956 இல் திரு திருமதி.தியாகராசா நேசம்மா தம்பதிகளின் புத்திரியாக செல்வராணி அவர்கள் செல்வக்குணராசா, தெய்வேந்திரராசா, செல்வேந்திரராசா, அருளானந்தராசா போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் பாலசிங்கம் தவமணி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான மகேந்திரம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பிரதீபன், கலைமதன், தம்ஜா, அஜின் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சதீசன், குமுதா, ரேணுகா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தியா, ஆதிரன், காவியா, கவினயா, அனிஷ், சாதனா, தருண் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மல்லாவியில் தற்காலிகமாக வசித்ததுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05.07.2019 இல் 62 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அழகிய முகமே
....... அன்பு உள்ளமே
இதழ் விரித்த
........பூப் போல
நெற்றியில் குங்குமம்
.......நித்தம் சிரிக்கும்
நேர்மை உறவே
.........நித்தம் ஏங்குகிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஜூன், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.