ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி சின்னத்துரை

வயது 8817 ஜூன், 1931 – 30 ஜூன், 2019

பிறந்த இடம்
Deraniyagala
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

தெரணியகலயைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

முருகதாசன், நிலோஜனா, சுலோஜனா, விமலதாசன், அனோஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுராதை, குலேந்திரன், காலஞ்சென்ற றஞ்சன், ரமணிகா, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியம்மா, பத்மாவதி, ராஜேந்திரா மற்றும் மகேந்திரா, பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, புஸ்பவதி, கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கீர்த்திகன், ஆர்த்திகன், அரண்யா, நிரோதா- சுஜன், நிகுலன், பிறேமிகா- பிரசாந், கீர்த்திகா- முகுந்தன், றஜீன், நிலோஷன், நிகாஷன், அஞ்சனா, சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்தூரி, ஷ்ரவன், டிலன், எய்டன், சியாரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் அழகிய புல்லினமும்,நீர்வீழ்ச்சி, மலைக்காடுகள்,நதிகள் என மனதுக்கு இரம்மியமாக காட்சி தருவதுடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்த சப்பிரகமுவ மாகாணத்தில் தெரணியகலயில் 17/JUN/1931 ஆம் ஆண்டு உடுவில் சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளாக மகேஸ்வரி அவர்கள்அரியம்மா,பத்மாவதி,ராஜேந்திரா,மகேந்திரா,பாலேந்திரா,தெய்வேந்திரா,யோகேஸ்வரி,புஸ்பவதி,கமலாபதி,புவனேந்திரா,கஜேந்திரா,சரஸ்வதி,திலகவதி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகன் சின்னத்துரை என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து முருகதாசன்,நிலோஜனா,சுலோஜனா,விமலதாசன்,அனோஜனா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அனுராதை,குலேந்திரன்,றஞ்சன்,ரமணிகா,முருகதாஸ் போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் தெல்லிப்பழையில் இன்பமாக வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன்.குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 30.06.2019 இல் 88 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

"தெரணியகலயில் பிறந்த உறவே

தெல்லிப்பழையில் வசித்த உயிரே

தொண்டு ஆற்றி தொன்மம் காத்து

பண்பாய் வாழ்ந்து பாரில் பிரிந்தீரே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.