நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா
வயது 8011 மே, 1939 – 22 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Birmingham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியின் சகல வளங்களைக் கொண்ட மட்டுவில் தெற்கில் 11/MAY/1939 இல் திரு.திருமதி செல்லையா அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் மகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மாசிலாமணி, குமாரசாமி, நடராசா, மதியாபரணம், துரைராஜா, படைவீரசிங்கம் எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தையா, கண்ணகை தம்பதிகளின் மகன் கந்தையா விக்னேஸ்வரராஜா எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்களின் வாழ்க்கைப் பயனாக வினோதராஜா, சுரேந்திரராஜா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பிள்ளைகள் பெரியவர்களாகியதும் மதி என்பவரைத் திருமணம் முடித்து வைத்து ஸ்கந்தராஜா- அனித்தா, அரவிந்தராஜா, அஜேஸ்- கவிதாராணி, பிரித்தேஷ்- திவ்யாரணி, ரம்யாராணி எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் போர் காரணமாக இடம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்த இவர் பேரப்பிள்ளைகளை தூக்கி முத்தமிட்டு வளர்ப்பதில் பொழுதைப் போக்கியதுடன், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.12.2019 இல் 80 வயதில் பிரித்தானியாவில் உள்ள Birmingham நகரில் இறையடி அடைந்தார்.
அன்னையே ஆருயிர் உள்ளமே
எம்மையே தினம் தினம் தினைத்திடும் உள்ளமே
உங்கள் புன்னகையே போதும் கவலை தீர
கண்ணாடி முகமும் உருழும் கருவிழியும்
என்நாளும் பார்க்க ஏங்குகிறது ஈரவிழி
எங்கே போனீர் எமைப் பிரிந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

