நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி குருமூர்த்தி
வயது 6622 அக்டோபர், 1952 – 19 மே, 2019
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடனடியாக ஓடிவந்து வேண்டிய உதவி, ஒத்தாசைகள் புரிந்தோருக்கும், எமது துயரில் பங்குகொண்ட அனைத்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியோருக்கும் கண்ணீர்அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும், மேலும் வேறு பல உதவிகள் புரிந்தோருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும்,எப்போதும் செழிப்பாக உள்ளதும்,தெங்கு தோட்டம் நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கிளிநொச்சி வட்டக்கச்சியில் சண்முகம் கற்பகம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக மகேஸ்வரி அவர்கள் 22/OCT/1952 ஆம் ஆண்டில் இவ் அவனியில் இராசேந்திரம், நேசம்மா, இராசம்மா, கனகேஸ்வரி, கமலாவதி, சரஸ்வதி, மனோன்மணி, புனிதவதி, பரமேஸ்வரி, மகாலட்சுமி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான குருமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து விபிசணன், ஜெகப்பிரபா, தனேசன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து கிருத்திகா, அனுருத்தன், சுவீற்லன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகளை ஆற்றி வைசாலி, ஆதித்தயன், தியா, அமியா, ராகவ் போன்ற அன்புப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கிளி என அன்பாக அழைக்கப்படும் இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19.05.2019 இல் 66 வயதில் கனடாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"வட்டக்கச்சி மண்ணின்
......வதன முகமே
வாடா மலரே
......அன்பு உள்ளமே
புன்னகை முகமே
......புது வசந்தமே
பாச உறவே
......பறந்து போனீரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

