நன்றி நவிலல்

மகேஸ்வரி கனகலிங்கம்
வயது 87
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை, Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் தொல்புரத்தில் 26/JUL/1932 இல் அன்பு உள்ளமாக மகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் மகனான கனகலிங்கம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர். இருவரின் வாழ்க்கைப் பயனாக அமிர்தம்,அரவிந்தன்,அருந்ததி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சந்திரன், சசிகலா, இலங்கேசன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து சாருகா, தர்ஷிகா, கிருஷ்வினி, மாதவன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் தெஹிவளை Ratnakara place இல் வாழ்ந்து வந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதிலும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 02.10.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Edmonton நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
”எமது அன்னையே
உமது பண்பால் உலகில் உயர்ந்து
நமது வாழ்கையை நல் நிலையாக்கிய
அறிவு உள்ளமே அன்னை மடியே
நின்தன் அன்பை நிலையாகப் பிரிந்த
மனதில் வாழ்ந்த மங்கா ஒளியே
கண்ணீர் விட்டு கதறி அழுகிறோம்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

