மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி தம்பித்துரை
வயது 7620 ஜூலை, 1942 – 5 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தம்பித்துரை அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
உமாசுதன், உமாஜோதி, உமாபதி, உமாசுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அகிலா, காண்டீபன், யோகராஜா, புவனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(இலங்கை), குமாரசாமி(நியூசிலாந்து), இராசரத்தினம்(இலங்கை), கமலாவதி(இலங்கை), குலம்(ஆனந்தன்- கனடா), சிவனேசு(கனடா), லகுலராஜா(கனடா), ரகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, செல்வம், தம்பிராசா, சின்னத்தம்பி, நடேசு, செல்லத்துரை, றோசம்மா மற்றும் தங்கச்சியம்மா, இரத்தினம், தேவி, இராசேந்திரம், சிவமலர், தனேஸ்வரி, நேசமலர், ரகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தா, அபிதா, அனுஜா, லக்ஷிகா, ஆரன், அஸ்மிதா, தனுஷ், ஜெயராம், கீர்த்தி, ஆகாஷ், பிதுஜா, பாரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 20/JUL/1942 ஆம் ஆண்டு ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக மகேஸ்வரி அவர்கள் பொன்னுத்துரை, குமாரசாமி, இராசரத்தினம், கமலாவதி, குலம், சிவனேசு, லகுலராஜா, ரகுலேஸ்வரி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் தம்பித்துரை என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உமாசுதன்,உமாஜோதி,உமாபதி,உமாசுதர்சினி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அகிலா, காண்டீபன், யோகராஜா, புவனதாஸ் போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து பிருந்தா, அபிதா, அனுஜா, லக்ஷிகா, ஆரன், அஸ்மிதா, தனுஷ், ஜெயராம், கீர்த்தி, ஆகாஷ், பிதுஜா, பாரதி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இன்பமாக வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன்.குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05.07.2019 இல் 76 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்புக் கொடியே எங்கள்
அன்னக் கொடியே
தங்க நிறமே எமக்குத்
தாகம் தீர்த்து
பங்கம் வராது
பாதுகாத்த பண்பு உயிரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

