நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் நாகேந்திரம்
ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட தலைமை தபால் அதிபர்
வயது 6921 டிசம்பர், 1949 – 19 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கச்சாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட கச்சாய் தெற்கில் 21/DEC/1949 ஆம் ஆண்டில் திரு.திருமதி மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாக திரு.நாகேந்திரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு சிவபாக்கியம், நவரத்தினம், பாலசிங்கம், யோகேந்திரன், யோகேஸ்வரன் போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளாக ஞானகலாவதி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக நிசாலினி எனும் ஒரே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து வந்தனர் ஆனால் இறைவன் தொடர்ந்து மகிழ்ச்சியை தரவில்லை பாசமிகு பிள்ளையை பிரித்துச் சென்றான் அப் பிரிவின் தாக்கம் இறுதிவரை மாறாமலே வாழ்ந்து வந்தார்.
மேலும் யாழ்.மாவட்ட தலைமைத் தபால் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர் இவ்வாறு மனைவி, உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.10.2019 இல் 69 வயதில் அல்வாய் தெற்கில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
தந்தி மண்ணன் - எங்கள் தங்க உள்ளம்
வந்து நின்றால் - அனைவரும் அன்பு பொழிவர்
உந்தித் தள்ளிய எமது உலக மகான்
விந்திய மலை போல் உயரம் கொண்டு
பந்த பாசமாய் வாழ்ந்து பிரிந்து சென்றுரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

