மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் துரைசிங்கம்
ஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தார்
வயது 7929 மே, 1939 – 28 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- புலோலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி, நாவற்குழி, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, நாவற்குழி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதேவி(தவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவிதா(கனடா), கீதா(இங்கிலாந்து), சுபா(றாதி- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளரீதரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி, கந்தசாமி, சிவசுப்பிரமணியம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ருதி, கர்சா(இங்கிலாந்து), சேயோன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலி கிழக்கில் 29-05-1939 இல் மாணிக்கம் இராசம்மா தம்பதிகளுக்கு கனிஷ்ட புதல்வனாய் துரைசிங்கம் அவர்கள் சரஸ்வதி, பரமேஸ்வரி, கந்தசாமி, சிவசுப்பிரமணியம், தனபாலசிங்கம் ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான ஜெகதேவி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக கவிதா, கீதா, சுபா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்றாக படித்த இவர் சுகாதார உத்தியோகத்தராக மக்களுக்கு கடமை ஆற்றி ஓய்வு நிலை பெற்றார், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பெறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.04.2019 இல் 79 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
புலோலி மைந்தனே
......எம் புத்துயிரே
புதுமணம் பரப்பும்
......வாடா மலரே
கருணைக் கடலே
.....கருமைக் கண்ணனே
காலம் உள்ளவரை
.....கலங்கும் நம் விழியுடன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

