மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் செல்லம்மா
வயது 8227 பிப்ரவரி, 1937 – 17 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் செல்லம்மா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வைத்தி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(கனடா), ரோசாமலர்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), சரோசா(இலங்கை), காஞ்சனா(இலங்கை), வசந்தா(இலங்கை), சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), ராஜலிங்கம்(கனடா), சசிகலா(கனடா), ஜெயச்சித்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசு, தம்பிப்பிள்ளை, செல்லதுரை, பொன்னுத்துரை, சுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியடியில் 27/FEB/1937 இல் திரு.திருமதி வல்லிபுரம் வைத்தி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் செல்லம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் மாணிக்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மகாலிங்கம், ரோசாமலர், கனகலிங்கம், சரோசா, காஞ்சனா, வசந்தா, சாந்தலிங்கம், மஞ்சுளா, மல்லிகாதேவி, ராஜலிங்கம், சசிகலா, ஜெயச்சித்திரா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து அவர்கள் விருப்பப்படி திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.08.2019 இல் 82 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
கருணை மனமே கடவுள் உள்ளமே
மனசில் இன்புற்ற மாதர் குலமே
மதி போல் அழகு கொண்ட வதமே
பதி போல் வாழ்ந்து கருணை காட்டி
விதி செயலால் விடை பெற்றீரே
கதி கலங்கி அழுகிறோம் கருணை உறவே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

