ஆறுதல்

மரண அறிவித்தல்

மஞ்சுளா காயத்திரி குமரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மஞ்சுளா காயத்திரி குமரன்

வயது 5821 ஏப்ரல், 1961 – 27 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
ஹற்றன்
வாழ்ந்த இடம்
சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஹட்டனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா காயத்திரி குமரன் அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜசிங்கம், சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமநாதன், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சயந்தன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சியாமளா(ராஜி - நோர்வே), தயாளசிங்கம்(ஹட்டன்), வத்சலா(கனடா), பிரேமளா(ஜக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமார், கிரிஷாந்தி, டியூக்(குகேந்திரன்), கோணேஸ், செல்வி, ஜெயமனோகர், அமுதன், ஜெயகௌரி, வாசுகி, தேவதாஸ், துளசி, முருகதாஸ், காலஞ்சென்ற பரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரிகா, சுபிட்சிகா, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

வினுஷா, கௌதம், லவன், லாவண்யா, விராளீசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

வைஷ்ணவி, அஷ்வினி, கஜன், ராகவி, திருமகள், கலைச்செல்வன், மயூரி, மயூரதன், மயூரதி, தக் ஷாயினி, லக்மிகா, நிரூபியா, கிரிஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் மத்திய பிரதேசமான மலைகள் நிறைந்த நுவரேலியா மாவட்டத்தின் அழகிய புல்நிலங்களைக் கொண்ட இடமும், தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமும் தேயிலைத் தோட்டம், மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள், பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த ஹட்டனில் 21-04-1961 ஆம் ஆண்டில் ராஜசிங்கம் சரோஜினிதேவி தம்பதிகளுக்கு அழகிய குழந்தையாக மஞ்சுளா காயத்திரி அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார். அன்பும் பண்பும் நிறைந்த இவர் சியாமளா,தயாளசிங்கம்,வத்சலா,பிரேமளா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சோமநாதன் முத்தம்மா தம்பதிகளின் அழகு ஆண் மகனான குமரன் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து சயந்தன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

இவர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.04.2019 இல் 58 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

முழுக் கதையையும் வாசிக்க

"குறிஞ்சி நிலத்தின்
......குல மகளே
குதூகல மனமே
......சாந்த குணமே
சுயநலம் அற்ற
....இரக்க உருவே
உங்கள் நினைவால்
.....வாடும் மலரானோம்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.