மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் அருளானந்தன்
வயது 7930 ஜூன், 1941 – 23 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் தெற்கு கவிஞர் செல்லையா வீதியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு வீரபத்திரர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அருளானந்தன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீபதி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா, அறிவழகன்(பாபு), அருள்மொழி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜெயச்சந்திரன், ரஞ்சினிதேவி, ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அம்பிகைபாகன், காலஞ்சென்ற அழகானந்தன்(முன்னாள் இ.போ.ச சாரதி- முல்லைத்தீவு), அனந்தராசன்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சரி, கவித்தூரிகா, மிருதுளன், ஆராதனா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

