மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி மனோகரன்
இளைப்பாறிய ஆசிரியர்(யாழ் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி- கொழும்பு)
வயது 6425 செப்டம்பர், 1954 – 7 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மனோகரன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் கந்தசாமி, பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரவாகு சண்முகம், கந்தையா தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
பிரதீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(சிவம்- கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசங்கரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மாதகலில் 25/SEP/1954 ஆம் ஆண்டில் திரு.திருமதி அருணாசலம் கந்தசாமி,பொன்னம்பலம் சின்னத்தங்கம்தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.மனோகரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கருணாகரன், விஜயலட்சுமி, குணசேகரன், பாஸ்கரன், சிவசேகரன், விஜயசேகரன், ஸ்ரீசங்கரன் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், வீரவாகு சண்முகம், கந்தையா தவமலர் தம்பதிகளின் அன்பு மகள் சாரதாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பிரதீபன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்றாக படித்த இவர் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மற்றும் கொழும்பு புனித அந்தோனியார் கல்லூரி என்பவற்றில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்புள்ளம் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை, சகோதரங்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.07.2019 இல் 64 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மாதகல் மண்ணின்
மாசற்ற உறவே
ஆறுதல் தரும்
அழகிய உயிரே
கற்பித்தலில் சிறந்த
கல்லூரி ஆசானே
பற்றுதலுடன் வாழ்ந்து
எமை விட்டுப் பிரிந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

